Monday, September 15, 2014

Samsung Smart Education New Learning Experience -(சாம்சங் வழங்கும் கல்வி இணையம்)

Share it Please
Samsung Smart Education 
New Learning Experience
(சாம்சங் வழங்கும் கல்வி இணையம்)





சாம்சங் நிறுவனம் இந்தியாவில், முதல் முதலாக கல்விக்கென அப்ளிகேஷன் ஒன்றைத் தந்துள்ளது.  மாணவர்கள் இதனை இயக்கி, பாடங்கள் சார்ந்த தங்கள் கல்வித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம். 'Samsung Smart Learning' என இதனை சாம்சங் பெயரிட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் MSC (Media Solutions Center) பிரிவு இதனை வடிவமைத்து இயக்குகிறது.


இது ஒரு க்ளவ்ட் அமைப்பிலான அப்ளிகேஷன் தீர்வாக இருக்கும். இது 2ஜி மற்றும் 3ஜி பார்மட்களில் கிடைக்கும். அனைத்து சாம்சங் டேப்ளட் பி.சி.க்கள் மூலமாக இதனைப் பெறலாம்.  இந்தப் பிரிவில், இந்தியாவில் சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் பயிலும் 7 கோடி மாணவர்களுக்கு வகுப்பு 1 முதல் 12 வரையிலான  பாடக் குறிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்திடும் 45 லட்சம் மாணவர்களுக்கும், தேர்வுக் குறிப்புகள் இதில் கிடைக்கின்றன. மற்ற கல்வி திட்டங்களில் பயில்வோருக்கும் விரைவில் பாடக் குறிப்புகள் இதே போன்ற  அப்ளிகேஷன் வழியாக வழங்கப்படும். 

இந்த அப்ளிகேஷனில், வகுப்பறைகளில் ஆசிரியர்களால் தரப்படும் பாடக் குறிப்புகளுக்குக் கூடுதலான விளக்கங்கங்கள் தரப்படும். ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு மாணவரும் இதற்கான கட்டணத்தைச் செலுத்திப் பயன் பெறலாம். பள்ளிகளுடன் இதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் சாம்சங் இந்தியா முயற்சித்து வருகிறது. 
இந்த பாடக் குறிப்புகளை எஸ்.டி. கார்ட்களில் பதிந்து, சாம்சங் விற்பனை மையங்கள் வழியாக விற்பனை செய்திடவும் சாம்சங் 
இந்தியா நிறுவனம் திட்டமிடுகிறது. இது போன்ற க்ளவ்ட் அமைப்பில் கல்வி சார்ந்த பாடக் குறிப்புகளைத் தரும் முயற்சி, இந்தியாவில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 

அண்மையில், சாம்சங் நிறுவனம், இந்திய வாடிக்கையாளருக்கு மட்டும் என தனியே ஒரு அப்ளிகேஷன் ஸ்டோர் ஒன்றைத் தொடங்கியது. இதில் இவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்கள் மட்டும் கிடைக்கும். மொத்தமாக லட்சக் கணக்கில் அப்ளிகேஷன்களை வைத்துத் தருவதனைக் காட்டிலும், எவை முக்கியமாகத் தேவைப்படுமோ, அந்த அப்ளிகேஷன்களை மட்டும் கொண்டு ஸ்டோர் இயக்குவது நல்லது என்று சாம்சங் கருதுகிறது. 


No comments:

Post a Comment

Followers

Find us on Facebook

Follow The Author