Isotope Battery



நீர் மற்றும் ரேடியோ ஐசோடோப்பினை கொண்டு உருவாக்கப்பட்ட முதல் பேட்டரி வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் விண்கலங்களுக்கு நீடித்த சக்தியை கொடுக்கும் விதத்தில் அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழக மாணவர்கள் இதை தயாரித்துள்ளனர்.
இந்த பேட்டரியின் முக்கிய அம்சம் அதில் உள்ள ‘ஸ்டிரான்ஷியம் 90’ என்னும் கதிரியக்க ஐசோ டோப்தான். இந்த பேட்டரியின் மின் கலம் பிளாட்டின பூச்சு கொண்ட நுண்ணிய டைட்டானியம் டை-ஆக்ஸைடால் உருவாக்கப்பட்டுள்ளதால் அதிவேகத்தில் எலக்ட் ரான்களை உற்பத்தி செய்கிறது.
மேலும் இப்படி உற்பத்தி செய்யப்படும் எலக்ட்ரான்களை சீரான அளவில் மின் சக்தியாக தேக்கி வைத்து நீடித்த ஆற்றலை தர தண்ணீரை பயன்படுத்துகிறார்கள்.