Tuesday, September 30, 2014

Good Bye Orkut From Today

Share it Please
7qYgF1W.jpg

2000ம் ஆண்டு Y2K பிரச்னையிலிருந்து மீண்டு வந்த கணினிதுறைக்கு புதியதாய் அறிமுகமானது சமூக வலைதளங்கள் இன்று ஃபேஸ்புக்,ட்விட்டர் என பரவி விரிந்து கிடக்கும் சமூகத்திற்கு முதலில் அறிமுகமான சமூக வலைதளம் ஆர்குட் தான். கல்லூரி மானவர்களையும், இளைய சமூதயாத்தையும் உலகத்தோடு இணைக்கும் முயற்சியில் ஜனவரி 24ம் தேதி 2004ல் தன்னை இணைத்து கொண்டது ஆர்குட். ஃபேஸ்புக்கும் சம காலத்தில் துவங்கப்பட்டது தான் சரியாக சொல்லப்போனால் பிப்ரவரி 4 ம் தேதி 2004ல் துவங்கப்பட்டது.தற்போது தனது சேவையை நிறுத்திக்கொள்வதாக ஆர்குட் அறிவித்திருக்கிறது.

ஆர்குட் தளத்தை கூகுள் நிறுவனம் தான்  அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் ஹிட் அடித்த ஆர்குட்டிற்கு சோதனையாய் வந்தன. அதிநவீன வசதி கொண்ட ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன் போன்ற தளங்கள். கூகுள் இந்த போட்டியை சமாளிக்க கூகுள் பிளஸ் என்ற சமூக வலைதளத்தை துவங்கியது. ஏற்கனவே வீழ்ச்சியின் பிடியில் இருந்த ஆர்குட்க்கு இது மேலும் சரிவை தந்தது.



J5ng5vH.jpg?1



அறிமுகம் செய்யப்பட்ட அதே ஆண்டில் அறிமுகமான ஆர்குட் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை ஈர்த்தது. ஆனால் தற்போது இந்த ஆர்குட் வலைத்தளத்தின் செயல்பாடு வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என அறி்வித்திருந்தது. அதுமட்டுமின்றி ஆர்குட் நிறுவனம் உங்களது புகைப்படங்கள், தகவல்கள் ஆகியவற்றை கூகுள் ப்ளஸில் சேமித்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.

ஆர்குட் ஆரம்பித்த காலத்தில் பிரபலமான வார்த்தைகளாக 'ஸ்க்ராப்' போஸ்ட், ஆர்குட் சாட் போன்றவை ஆர்குட் பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருந்த வார்த்தைகளாக இருந்தன. மற்ற சமூக வலைதளங்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஆர்குட் ஒரு முன்னோடியாக விளங்கியது என்றே கூறலாம். காலம் செல்ல செல்ல ஆர்குட் பயன்பாட்டாளர்களது எண்ணிக்கை மற்ற சமூக வலைதளங்களை நோக்கி பயணித்தது. நாலை இதே நிலை வேறு எதாவது ஒரு சமூக வலைதளத்திற்கு வந்தாலும் அதற்கும் ஆர்குட் முன்னோடியாகியுள்ளது. இன்னும் சிலர் ஆர்குட்டின் லேஅவுட் போல் வேறு எந்த சமூக வலைதளத்திலும் இல்லை, ஆர்குட் பயன்படுத்த எளிதாக இருந்தது என கூறி கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்று செப்டம்பர் 30, ஆர்குட்டிற்கு உலகமே குட்பை சொல்லி கொண்டிருக்கிறது. சிலர் பதிவு செய்துள்ள பதிவுகளில் என் காதலி என் போஸ்ட்டை பார்த்துவிட்டாலா என்பதை ஆர்குட் சொல்லும் போது அதனைவிட மகிழ்ச்சி எதுவும் இல்லை, எங்கள் தலைமுறையில் பிரபலமான சமூக வலைதளம் என தங்கள் வருத்தம் கலந்த பதிவுகளை வெளியிடுகின்றனர்.பிரேசிலில் மட்டும் இன்று 40 லட்சம் பேர் ஆர்குட்டிற்கு குட் பை கூறியுள்ளனர்.


* மாற்றம் என்ற சொல்லே மாறாதது!’ நாளைக்கு இதே நிலைமை ஃபேஸ்புக்குக்கும் வரலாம். அப்போ எப்படில்லாம் இப்படி மொக்கையா ஸ்டேட்டஸ் போடுவோம்னு இப்பவே யோசிச்சு வெச்சுக்கோங்க மக்களே!
 
இன்றோடு முடிவுக்கு வரும் ஆர்குட்க்கு சமூக வலைதளங்களில் ''குட் பை" சொல்லி வருகின்றனர். சிலர் ஆர்குட்டிற்கே சென்று தங்கள் வருத்தத்தை பதிவு செய்கின்றனர். நாமும் சொல்வோம் குட்பை ஆர்குட்

No comments:

Post a Comment

Followers

Find us on Facebook

Follow The Author